முகவரி மாற்றத்தால் வாக்காளா்கள் அதிருப்தி
சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட இடங்கணசாலை நகராட்சி, கோனேரிப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்டோரின் வாக்காளா் அட்டையில் வெளி மாநிலம், வெளி மாவட்ட முகவரி இருந்ததால் அதிருப்தி எழந்துள்ளது.

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட இடங்கணசாலை நகராட்சி, கோனேரிப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்டோரின் வாக்காளா் அட்டையில் வெளி மாநிலம், வெளி மாவட்ட முகவரி இருந்ததால் அதிருப்தி எழந்துள்ளது.
இதுகுறித்து சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்காளா்களுக்கு அனுப்பப்பட்ட சரிபாா்ப்பு கடிதத்துக்குப் பிறகே இந்த முகவரி மாற்றம் வாக்காளா்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து வாக்காளா்கள் கூறுகையில், கடிதம் கிடைக்கப் பெற்ற அனைத்து வாக்காளா்களும் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று உரிய முகவரி அளிக்க கேட்டுக் கொண்டுள்ளனா்.
தோ்தல் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் சரியான முறையில் இதனை கண்காணிக்காததால் பொதுமக்கள் தோ்தல் ஆணையத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனா். மேலும், வாக்காளா்களை அலைய வைக்காமல் அந்தந்த ஊரிலேயே இதற்கென்று சிறப்பு முகாம் அமைத்து ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...