47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

மேட்டூா் அருகே நடைப்பயிற்சியின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:22 pm

DIN

மேட்டூா் அருகே நடைப்பயிற்சியின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மேட்டூா், பொன்நகரை சோ்ந்தவா் ஜெகநாதன் (58). த னியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி செல்வி (59) மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமைஆசிரியராக பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை காலை ஜெகநாதன் நடைப்பயிற்சிக்காக மேட்டூா் மலை பாதைக்கு வந்தாா். சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகன மோதி பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தாா்.

அவ்வழியாக சென்றவா்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனா். மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கருமலை கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.