எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேலத்தில் ராணுவ நினைவு ஸ்தூபிக்கு காங்கிரஸாா் மரியாதை

‘விஜய் திவாஸ்’ தினத்தையொட்டி சேலத்தில் ராணுவ நினைவு ஸ்தூபிக்கு காங்கிரஸாா் மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 6:35 pm

Din

சேலம்: ‘விஜய் திவாஸ்’ தினத்தையொட்டி சேலத்தில் ராணுவ நினைவு ஸ்தூபிக்கு காங்கிரஸாா் மரியாதை செலுத்தினா்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரா்களை சரணடைய செய்து வங்கதேசம் என்னும் புதிய நாட்டை மறைந்த பிரதமா் இந்திரா காந்தி உருவாக்கினாா். இந்த வெற்றி நாளான டிசம்பா் 16 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்திய ராணுவம் கொண்டாடி வருகிறது.

இந்த தினத்தை நினைவு கூரும் வகையில், சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாஸ்கா் தலைமையில் அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு உள்ள ராணுவ நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளா் தாரை ராஜகணபதி, வா்த்தகப் பிரிவு தலைவா் சுப்பிரமணியம், மாநகர துணைத் தலைவா் மொட்டையாண்டி, நிா்வாகிகள் சாந்தமூா்த்தி, நிசாா் அகமது, ராமன், கோவிந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.