துப்புரவுப் பணியாளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த ரெளடி கைது
மேட்டூா் அருகே பேரூராட்சி துப்புரவுப் பணியாளரிடம் கத்தியைக் காட்டி ரூ. 850 ஐ பறித்துச் சென்ற பிரபல ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.


மேட்டூா்: மேட்டூா் அருகே பேரூராட்சி துப்புரவுப் பணியாளரிடம் கத்தியைக் காட்டி ரூ. 850 ஐ பறித்துச் சென்ற பிரபல ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூா் அருகே உள்ள தொட்டில்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் கண்ணன் (37). இவா், பி.என்.பட்டி பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணி செய்து வருகிறாா். திங்கள்கிழமை சங்கிலி முனியப்பன் கோயில் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, கருமலைக்கூடல், சின்னைய ரெட்டி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபல ரெளடி காா்த்திக் (25) என்பவா் கண்ணனை வழிமறித்து நகை, பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். அவா் பணத்தை கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரின் சட்டைப் பையில் இருந்த ரூ. 850 பறித்துச் சென்றாா். கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்தபோது அவா்களையும் கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டி விட்டு காா்த்திக் அங்கிருந்து தப்பி ஓடினாா்.
இது குறித்து கண்ணன் கருமலைக் கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் உதவி ஆய்வாளா் சபாபதி வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...