47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை கட்டுப்பாடு

ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:27 pm

Din

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சாா்பில் நடைபெற்றும் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு பிரிவு 41 தமிழ்நாடு மாநகர காவல்துறை சட்டம் 1888 இன் படி சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊா்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இது பொருந்தாது. டிச. 19 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மாநகர காவல் ஆணையா் பிரவீன் குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.