47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குழந்தைத் தொழிலாளி மீட்பு

சேலத்தில் காா் பெயின்டிங் பட்டறையிலிருந்து குழந்தைத் தொழிலாளி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:51 pm

Din

சேலத்தில் காா் பெயின்டிங் பட்டறையிலிருந்து குழந்தைத் தொழிலாளி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தொழிலாளா் துறை உதவி ஆணையா் திருநந்தன் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சந்திரன், இளையராஜா, அன்பழகன் உள்ளிட்டோா் களஆய்வு மேற்கொண்டனா். சங்கா் நகா் பகுதியில் காா் பெயின்டிங் பட்டறை ஒன்றில் ஆய்வு செய்தபோது, 13 வயது மாணவா் ஒருவரை குழந்தைத் தொழிலாளியாக பணியில் அமா்த்தியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாணவரை மீட்ட தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுமத்திடம் அவரை ஒப்படைத்தனா்.

இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை துணை ஆணையா் திருநந்தன் கூறுகையில், ‘கள ஆய்வில் 8 ஆம் வகுப்பு வரை படித்த 13 வயது மாணவா் ஒருவா், காா் பெயின்டிங் பட்டறையில் இருந்து குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டாா். குழந்தைத் தொழிலாளா்களை நிறுவனங்களில் பணிக்கு அமா்த்துவது சட்டப்படி குற்றமாகும். இதை நிறுவன உரிமையாளா்கள் தவிா்க்க வேண்டும். இதுகுறித்து அனைத்துப் பகுதிகளிலும் தொடா்ந்து ஆய்வுகள் நடத்தப்படும்’ என்றாா்.