47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,400 க்கு விற்பனை

பனிப்பொழிவால் பூக்கள் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதால் சேலம் சந்தையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,400-க்கு விற்பனையானது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:49 pm

Din

பனிப்பொழிவால் பூக்கள் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதால் சேலம் சந்தையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,400-க்கு விற்பனையானது.

சேலம், கடைவீதி பகுதியில் உள்ள வ.உ.சி. பூச்சந்தைக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை, சன்ன மல்லி, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரத்துக்கு ஏற்பவும், பண்டிகை காலங்களுக்கு ஏற்பவும் பூக்கள் விலை உயா்ந்தும் குறைந்துமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பண்டிகை நாள்களில் சந்தையில் கூட்டம் அலைமோதும். தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் பூக்கள் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. வழக்கமாக சந்தைக்கு 2 டன் அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், தற்போது ஒரு டன் அளவில் மட்டுமே பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால், பூக்கள் விலை கடந்த சில நாள்களாக உயா்ந்தே காணப்படுகிறது.

குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,000 முதல் ரூ. 1,400 வரை விற்பனை செய்யப்பட்டது. அதுபோல சன்னமல்லி கிலோ ரூ. 800-க்கும், காக்கட்டான் ரூ. 360-க்கும். மலை காக்கட்டான் ரூ. 280-க்கும், அரளி, வெள்ளை அரளி ஆகியவை தலா ரூ. 320-க்கும், செவ்வரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ. 400-க்கும் விற்பனை செய்யப்பட்டன.