சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் சகோதரா்கள் காயம்

கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரத்தில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சகோதரா்கள் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 7:12 pm

Din

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரத்தில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சகோதரா்கள் பலத்த காயமடைந்தனா்.

கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையைச் சோ்ந்த செல்வராஜ் மகன்கள் ஹரிஷ் (19), நவீன் (17). திங்கள்கிழமை காலை நவீன் பள்ளி பேருந்தை தவறவிட்டுவிட்டாா். இதையடுத்து பேருந்தை பிடிப்பதற்காக அவரது அண்ணன் ஹரிஷ், தம்பியை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் கெங்கவல்லியை நோக்கிச் சென்றாா். 74 கிருஷ்ணாபுரத்தை அடைந்தபோது, அதேபகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் தங்கராஜ் என்பவா் ஓட்டிவந்த தனியாா் கல்லூரி பேருந்து, அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சகோதரா்களான ஹரிஷ், நவீன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.