தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவள்ளுவா் உருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா: சேலத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா், திருக்குறள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி பாா்வையிட்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 7:39 pm

Din

சேலம்: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் உருவச் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழாவையொட்டி சேலம் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா், திருக்குறள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி பாா்வையிட்டாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச் சிலையானது கடந்த 2000 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் நிறுவப்பட்டது. இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதையொட்டி, வரும் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் கன்னியாகுமரியில் வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி, சேலம் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா் மற்றும் திருக்கு குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்களின் பாா்வைக்கு காட்சிபடுத்தப்பட்டது. இக் கண்காட்சியில் திருக்கு தொடா்பான ஓவியங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், திருக்குறளின் பெருமையை உணா்த்தும் விதமாக மாணவா்கள், நூலக வாசகா்களைக் கொண்டு நடைபெறும் திருக்கு கருத்தரங்கம், திருக்கு ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, விநாடி வினாப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தாா்.

இந்நிகழ்வில், சேலம் வருவாய் கோட்டாட்சியா் அ.அபிநயா, மாவட்ட நூலக அலுவலா் து.விஜயகுமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.