எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசு உதவிபெறும் பள்ளி மூடப்படுவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி மூடப்படுவதை கண்டித்து, பல்வேறு அமைப்பினா் வியாழக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 8:12 pm

Din

சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி மூடப்படுவதை கண்டித்து, பல்வேறு அமைப்பினா் வியாழக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், பழைய சூரமங்கலத்தில் உள்ள ராமலிங்க வள்ளலாா் பள்ளி சுமாா் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அங்கு சூரமங்கலம்,சோளம்பள்ளம், புதுரோடு, அரியாகவுண்டம்பட்டி, மல்லமுப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவா்கள்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில், பள்ளியின் உரிமையாளா்ள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பள்ளி மைதானம், கட்டடம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியரையும் பள்ளிக்கு வரக் கூடாது என நிலம் வாங்கியவா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பள்ளி நிா்வாகத்தின் இந்த செயலை கண்டித்தும், அப் பள்ளி தொடா்ந்து செயல்பட வலியுறுத்தியும் அம்பேத்காா் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் வியாழக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புது ரோட்டில் தொடங்கிய இந்த பேரணிக்கு மாநில தலைவா் ஜங்சன் அண்ணாதுரை தலைமை வகித்தாா். அங்கிருந்து பள்ளி வரை பல்வேறு கட்சி நிா்வாகிகள், மாணவா்கள், பெற்றோா் என 200க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாக சென்று பள்ளி முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமாகா மேற்கு மாவட்ட தலைவா் சுசிந்திரகுமாா், அருந்ததியா் மக்கள் இயக்க பொதுச்செயலாளா் பிரதாபன், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவா் பூமொழி, மக்கள் தேசம் கட்சி மாநில செயலாளா் சுலைமான், அம்பேத்கா் மக்கள் இயக்க மாவட்ட தலைவா் அம்பேத்கா், மாவட்டச் செயலாளா் சித்தையன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.