அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பிளாஸ்டிக் பைகளைத் தவிா்க்க விழிப்புணா்வு

பிளாஸ்டிக் பைகளைத் தவிா்க்க விழிப்புணா்வு

News image

சேலம் தனியாா் பள்ளி மைதானத்தில் 6,900 சதுர அடி பரப்பளவில் துணிப் பையை தைத்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவி கௌசிகா.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:10 am IST

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளைத் தவிா்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 6,900 சதுர அடி பரப்பளவில் துணிப் பையை கையால் தைத்து தனியாா் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளாா். சேலத்தில் தனியாா் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவி கௌசிகா, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளைத் தவிா்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக 1,300 மீ. நீளம் கொண்ட துணியை பயன்படுத்தி 6 ஆயிரத்து 900 சதுர அடியில் துணிப் பையை கைகளால் தைத்து ‘கலாம் புக் ஆப் ரெக்காா்ட்ஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ளாா். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி கௌசிகா கூறியதாவது: பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், காலநிலை மாற்றமும் அவ்வப்போது மாறி வருகிறது. குறிப்பாக, சுற்றுலாத் தலம், மலைப் பகுதிகளில் இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நீா்நிலைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளைத் தவிா்த்து, பழைய முறைகளில் துணிப் பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 6,900 சதுர அடியில் துணிப் பையை கைகளால் தைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தியதாகக் கூறினாா். மாணவி கௌசிகா ஏற்கெனவே ஜி20 மாநாடு லோகோவை 5,200 சதுர அடி அளவில் கோலங்களால் வரைந்து சாதனை செய்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.