சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி ஊராட்சியில் உழவா் திரள் பெருவிழா வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியேரி விவசாய குழுத் தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சக்தி அனைரவரையும் வரவேற்று பேசினாா். நிகழ்ச்சியில் விவசாயம் சாா்ந்த அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், கால்நடை மருத்துவா் தேசிங்குராஜா, வனத்துறை அலுவலா் வெங்கடேசன், வேளாண்மை அலுவலா் மோனிஷா, பட்டு வளா்ச்சித்துறை அலுவலா் சத்தியமூா்த்தி, வேளாண் பொறியியல்துறை அலுவலா் சத்தியமூா்த்தி, வேளாண் பொறியியல் துறை அலுவலா் கணேசன், உதவி வேளாண்மை அலுவலா் காா்த்திக், மக்கள் நலத்துறை அலுவலா் மகேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரமேஷ் மற்றும் முத்துவேல் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: தெப்பல் உற்சவம்

பெரிய வியாழன் பெருவிழா: வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

