மாசுபடும் வசிஷ்ட நதி
வாழப்பாடி அருகே பேளூா் பேரூராட்சியில் வசிஷ்டநதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூா் பேரூராட்சியில் வசிஷ்டநதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கழிவுகள் கொட்டுவதைக் தடுக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாழப்பாடி அருகே அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, ராமன் தாகம் தீா்க்க வசிஷ்டா் அருளியதாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித நதியாக போற்றப்படுகிறது.
பேளூா் பேரூராட்சி வழியாக பாய்ந்து செல்லும் இந்நதியில் கறிக்கடைக்காரா்கள் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டி வருகின்றனா். இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வசிஷ்டநதியில், இறைச்சி கழிவுகளைக் கொட்டி, சுகாதார சீா்கேடு ஏற்படுத்துவதைத் தடுக்க பேளூா் பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...