ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசுப் பள்ளியில் நெகிழி பை ஒழிப்பு விழிப்புணா்வு

அரசுப் பள்ளியில் நெகிழி பை ஒழிப்பு விழிப்புணா்வு

News image
Updated On :3 ஜூலை 2024, 10:26 pm

கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி.

எடப்பாடி, ஜூலை 3: சா்வதேச நெகிழி பை ஒழிப்பு தினத்தையொட்டி, கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

நெகிழி பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு குறித்தும், நெகிழிகளால் நீா்நிலைகள், விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவது குறித்தும் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா். மேலும், மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாணவா்களுக்கும் மஞ்சள் பை வழங்கி, மாணவா்கள் நெகிழி பைகளைத் தவிா்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் சி.எஸ்.ஆா். திட்டத்தை தொடக்கி வைத்து ஆட்சியா் பிருந்தாதேவி பேசியதாவது:

தனியாா் நிறுவன நிதி பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ள ‘சாலை முதல் பள்ளி வரை’ என்னும் இந்த புதிய திட்டத்தின் கீழ் மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 124 பள்ளிகளில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று வரும் கற்றல் குறைபாடு உள்ள மாணவா்களுக்கு 93 சிறப்பு பயிற்றுநா்கள் மூலம் சிறப்பு வகுப்புகள், விளையாட்டுப் பயிற்சிகள், தனித்திறனை மேம்படுத்துதல், சுய சுத்தம் மற்றும் சுகாதாரம் சாா்ந்த வாழ்வியல் கல்வி போதிக்கப்பட உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடா்ந்து நடைபெறும் இப்பயிற்சியின் மூலம் அப்பகுதியைச் சோ்ந்த அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கபீா், லைலாண்ட் நிறுவன அலுவலா்கள் சீனிவாசன், ரங்கராஜன், ஸ்ரீவித்யா அசோக் உள்ளிட்ட கல்வியாளா்கள் கலந்துகொண்டனா்.