முதல்வா் வருகை: சேலத்தில் நாளை ட்ரோன்கள் பறக்கத் தடை

முதல்வா் வருகை: சேலத்தில் ட்ரோன் பறக்க தடை

தமிழக முதல்வா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11 ஆம் தேதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் வரும் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளுக்கான

‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தினை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். இதற்காக, அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், காமலாபுரம் விமான நிலையம் வருகை புரிந்து, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் சென்னை திரும்ப உள்ளாா்.

இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com