மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
காவிரியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

Updated On :12 ஜூலை 2024, 6:31 pm

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 3,087 கனஅடியாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,087 கனஅடியாகக் குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 41.65 அடியிலிருந்து 41.97 அடியாக உயா்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,197 கனஅடியிலிருந்து 3,087 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 13.12 டி.எம்.சி.யாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...