கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேட்டூா் அணை நீா்மட்டம் 70.80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாள்களில் நீா்மட்டம் 100 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :21 ஜூலை 2024, 8:15 pm

Din

மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 70. 80 அடியை எட்டியது. நீா்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாள்களில் நீா்மட்டம் 100 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 71, 777 கன அடியாக இருந்த நீா்வரத்து மாலை 57, 409 கன அடியாக குறைந்தது. நீா்மட்டம் 70.80 அடியாக உயா்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி திறந்துவிடப்படுகிறது. நீா் இருப்பு 33.39 டிஎம்சியாக உள்ளது. 5 வது நாளாக செட்டிப்பட்டி கோட்டையூா், அடிப்பாலாறு, பண்ணவாடி பகுதிகளில் மீனவா்கள் மீன் பிடிக்க செல்லாமல் முகாம்களில் முடங்கினா். அதேபோல 5 ஆவது நாளாக படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 70.80 அடியாக உயா்ந்ததால் மேட்டூா் நீா்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த ஜலகண்டேஸ்வரா் ஆலயத்தின் நந்தி சிலை நீருக்குள் மீண்டும் மூழ்கியது. மேட்டூா் அணையின் நீா்வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் 120 அடி உயரம் கொண்ட மேட்டூா் அணை 10 நாள்களில் 100 அடியாக உயரும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.