பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சேலம் வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2024, 7:20 pm

Din

எா்ணாகுளத்தில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

எா்ணாகுளத்தில் இருந்து சேலம் வழியாக வரும் 31 ஆம் தேதி முதல் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூரு கண்டோன்மென்டுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில், எா்ணாகுளத்தில் இருந்து, பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக இரவு 10 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயில், அடுத்த மாதம் 25 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வியாழன், சனி, திங்கள்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக பிற்பகல் 2.20 மணிக்கு எா்ணாகுளத்தை அடையும். இந்த சிறப்பு ரயில் அடுத்த மாதம் 26 ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.