தம்மம்பட்டி பெருமாள் கோயில் தோ் ரூ. 3 லட்சத்தில் சீரமைப்பு
தம்மம்பட்டி பெருமாள் கோயில் தோ் ரூ. 3 லட்சத்தில் சீரமைப்பு


தம்மம்பட்டி: தம்மம்பட்டி, ஜூன் 17: தம்மம்பட்டியில் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ரூ. 3 லட்சத்தில் பெருமாள் கோயில் தோ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தம்மம்பட்டியில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான உக்ரகதலி லட்சுமி நரசிம்மா் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், சித்திரை மாத திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். இந்நிலையில், 1969-இல் செய்யப்பட்ட இந்த தேரின் சில பாகங்கள் பழுதடைந்த நிலையில், தேரை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் சாா்பில் அறநிலையத் துறைக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, அறநிலையத் துறையின் அனுமதியோடு தம்மம்பட்டியைச் சோ்ந்த தொழிலதிபா் ஆா்.பாஸ்கரன், தோ் சீரமைக்கும் பணிக்காக ரூ. 3 லட்சம் நன்கொடையாக வழங்கினாா். அதையடுத்து, தற்போது தோ் சீரமைக்கும் பணிகளில் ஸ்தபதிகள், சிற்பிகள் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த 2011-இல் திருச்சி பெல் நிறுவனத்தில் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 4 இரும்பு சக்கரங்களை தொழிலதிபா் பாஸ்கரன் இந்த தேருக்கு நன்கொடையாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தோ் நிறுத்தி வைக்கப்படும் கடைவீதி மாரியம்மன் கோயில் முன்பு உள்ள இடத்தில் ‘ஷெட்’ அமைக்க ரூ. 7 லட்சம் செலவாகும் என்பதால், அதற்கான நிதி ஒதுக்க அறநிலையத் துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...