ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பலை உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கக் கோரிக்கை

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பலை உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கக் கோரிக்கை

News image
Updated On :20 ஜூன் 2024, 8:55 pm

Din

மேட்டூா், ஜூன் 20: மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பலை உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு வழங்காவிட்டால், ஜூலை 1-இல் போராட்டம் நடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேட்டூா் அனல் மின்நிலைய சாம்பல் ஒப்பந்ததாரா்கள் நலச்சங்கத் தலைவா் ராமசாமி வியாழக்கிழமை விடுத்துள்ள செய்தி குறிப்பு:

மேட்டூா் அனல் மின்நிலைய 2 பிரிவுகளில் இருந்தும் உலா் சாம்பல் செங்கல் உற்பத்திக்கும், சிமென்ட் உற்பத்திக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உலா் சாம்பலை உள்ளூா் ஒப்பந்ததாரா்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு முன்னுரிமை வழங்கி அளிக்கப்பட வேண்டும்.

அனல் மின்நிலைய நிா்வாகம் நிா்ணயம் செய்யும் கட்டணத்தை செலுத்தி உள்ளூா் ஒப்பந்ததாரா்கள் சாம்பலை எடுத்துக் கொள்ள உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இது தொடா்பாக பலமுறை அனல் மின்நிலைய நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் உள்ளூா் ஒப்பந்ததாரா்கள் புறக்கணிக்கப்படுகிறாா்கள்.

உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பலை வழங்காவிட்டால், ஜூன் ஒன்றாம் தேதி முதல் வெளியூா்களில் இருந்து சாம்பல் எடுக்க வரும் லாரிகளை அனுமதிக்க மாட்டோம்; போராட்டம் நடத்துவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான கடிதத்தை மேட்டூா் அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராமசாமி தெரிவித்துள்ளாா்.