மின்சாரம் பாய்ந்து இறந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
மின்சாரம் பாய்ந்து இறந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்


மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், பள்ளப்பட்டி, முனியப்பன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (27). இவா் சேலம், கல்லாங்குத்து பகுதியில் திங்கள்கிழமை இரவு ஒரு கடைக்கு தகரச் சீட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா்.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு, அங்கு இருந்தவா்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினாா்.
உயிரிழந்த தினேஷுக்கு, சந்தியா (25) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.
இந்நிலையில் தனது கணவா் உடலை வாங்க மறுத்து சந்தியா மற்றும் அவரது உறவினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் சேலம் அரசு மருத்துவமனை பிரதான நுழைவாயில் முன்பு திரண்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் அப்போது தான் தினேஷ் உடலை வாங்குவோம் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...