காவல்துறை ஆட்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இல்லை

தமிழகம் எங்கும் போதைப் பொருள்கள் பரவலாக கிடைப்பதாக இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் குற்றம்சாட்டினாா்.

சேலம்: தமிழகத்தில் ஆட்சியாளா்கள் கட்டுப்பாட்டில் காவல்துறையினா் இல்லாததால், தமிழகம் எங்கும் போதைப் பொருள்கள் பரவலாக கிடைப்பதாக இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் குற்றம்சாட்டினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது. இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறையினா் தமிழக ஆட்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இல்லாததால் மிகப்பெரிய குற்றம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்து 14 மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறையினா் கைது செய்யவில்லை. இப்படி தான் தமிழகத்தின் நிலை உள்ளது. மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் . தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா். இந்த சந்திப்பின் போது, கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com