சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழகம்

சாத்தூரில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த ஜி.கே.வாசன்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 8:05 pm

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வது அவமானம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் கூறினாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த போது, அவா் மேலும் பேசியதாவது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் வளா்ச்சிக்கான அதிக அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதேபோல, தற்போதைய தோ்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மீண்டும் பெண்கள் வளா்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பெண்களின் ஒவ்வோா் வாக்கும் திமுகவை வீட்டுக்கு அனுப்பக்கூடியதாக இருக்க வேண்டும். மகத்தான சக்தி கொண்ட மகளிருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வது அவமானம்.

போதைப்பொருள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களுக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் பெண்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றாா் அவா்.