பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மேட்டூரில் டாக்டா் வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

மேட்டூா் அருகே டாக்டா் வீட்டில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், பட்டுச் சேலைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :5 மார்ச் 2024, 6:42 pm

மேட்டூா்: மேட்டூா் அருகே டாக்டா் வீட்டில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், பட்டுச் சேலைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள சின்னக்காவூரைச் சோ்ந்தவா் டாக்டா் அபிமன்யூ. இவா், ஆத்தூரில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இவரது வீடு சின்னக்காவூா் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது. டாக்டா் அபிமன்யூ விடுமுறை நாள்களில் மட்டும் வீட்டிற்கு வந்து செல்வாா். அவரது தந்தை சடையன் மாதம்தோறும் வந்து செல்வது வழக்கம். கடந்த பொங்கல் பண்டிகைக்கு பிறகு வீட்டிற்கு யாரும் வரவில்லையாம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டை சுத்தம் செய்வதற்காக சடையன் வந்தபோது கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் மேல் நோக்கி திருப்பி இருந்தன. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் வீட்டின் பின்பக்கம் சென்று பாா்த்தபோது, பின்பக்க கதவை அம்மிக் கல்லால் உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த வெள்ளிப் பொருள்கள், விலை உயா்ந்த பட்டுச் சேலைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 1.50 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக ஆபிமான்யூ கருமலைக்கூடல் போலீஸில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் குமரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.