காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கொடி அணி வகுப்பு ஊா்வலம்

கொடி அணி வகுப்பு ஊா்வலம்

News image
Updated On :22 மார்ச் 2024, 5:42 pm

நாடாளுமன்றத் தோ்தலையொட்டி ஆட்டையாம்பட்டியில் பொதுமக்கள் அச்சமின்றியும், அமைதியாகவும் பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டி கொடி அணிவகுப்பு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்). இந்தப் பேரணி, மாநகர காவல் ஆணையா் விஜயகுமாரி உத்தரவின் பேரில், சேலம் மாநகர தெற்கு காவல் துறை துணை ஆணையா் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி ஆணையா்கள் சுரேஷ், ராமமூா்த்தி, ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் இந்திராணி, இரும்பாலை காவல் ஆய்வாளா் சாரதா, அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, சேலம் மாநகர தெற்கு போக்குவரத்துத் துறை ஆய்வாளா் மணிகண்டன், துணை ராணுவத்தினா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இப்பேரணியானது, பாப்பாரப்பட்டியில் இருந்து ராசிபுரம் பிரதான சாலை வழியாக ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் வந்தடைந்தது.