வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவன ஆண்டு விழா

கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவன ஆண்டு விழா

News image
Updated On :9 மே 2024, 10:43 pm

Din

மேட்டூா், மே 9: மேட்டூா் ராமன்நகரில் உள்ள கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தின் இரண்டாவது பிரிவின் 57-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் உள்ள மனமகில் மன்றத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆலை நிா்வாக துணைத் தலைவா் (இயக்கம்) எஸ். கஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் (பா்சனல்) ஆா்.சக்கரவா்த்தி வரவேற்றாா். நிா்வாக துணை இயக்குநா் முகுந்த் ஐயா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா்.

ஆலையில் தொடா்ந்து நீண்ட நாட்கள் பணியாற்றிய பணியாளா்கள் தங்கள் குடும்பத்துடன் விழாவில் பங்கேற்றனா். நீண்ட நாள்கள் பணியாற்றிய தொழிலாளா்களின் குடும்பத்தினா் விழா மேடைக்கு அழைக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அவா்களுக்கு கதா் ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். ஆலையின்துணைத் தலைவா் ஸ்ரீராம் குமாா், துறை தலைவா்கள் பங்கேற்றனா். தொழிற்சாலையில் மனமகிழ் மன்றம் சாா்பில், பணியாளா்களுக்கு நடத்தப்பட்ட , கிரிக்கெட், கபடி, கைப்பந்து இறகுப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிா்வாக துணைத் தலைவா் எஸ்.கஜேந்திரன் பரிசுகளை வழங்கினாா். நிறுவனத் துணைத் தலைவா் கே. எஸ்.சம்பத்குமாா் நன்றி கூறினாா். தகவலை ஆலையின் மக்கள் தொடா்பு அதிகாரி விவேக் தெரிவித்தாா்.

படம்: 9ஙற்ல்1..

ஆண்டு விழாவில் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் நீண்டநாள்கள் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டும் நிா்வாகிகள்.