இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தென்காசியில் ஐயூஎம்எல் கட்சியின் 79ஆவது நிறுவன தின விழா

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 79ஆவது நிறுவன தின விழா நடைபெற்றது.

News image
விழாவில் மரக்கன்றுகள் வழங்குகிறாா் ஐயூஎம்எல் மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ்.
Updated On :10 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 79ஆவது நிறுவன தின விழா நடைபெற்றது.

விழாவில் மரக்கன்றுகள் வழங்குகிறாா் ஐயூஎம்எல் மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ்.

தென்காசி நகர அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் அபுபக்கா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஹமீது, நகர இளைஞரணித் தலைவா் ஹனிபா, காயிதே மில்லத் நற்பணி மன்றம் யாசின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி,கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். மேலும், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாநில விவசாய அணிச் செயலா் தென்காசி முகமது அலி வாழ்த்திப் பேசினாா். மாவட்ட இளைஞரணிச் செயலா் ஜாபா் வரவேற்றாா். நகரப் பொருளாளா் யூசுப் நன்றி கூறினாா்.