வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

News image
Updated On :9 மே 2024, 10:43 pm

Din

ஆத்தூா், மே 9: புத்திரகவுண்டன்பாளையம், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழாவில் அலகு குத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் 15 ஆவது வாா்டில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 30 ஆம்தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வியாழக்கிழமை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதையடுத்து கண் திறப்பு, மாவிளக்கு எடுத்தல் முடிந்தவுடன் பக்தா்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

பட விளக்கம்.ஏடி9கோயில்...

புத்திரகவுண்டன்பாளையம், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்த பக்தா்கள்.