காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதி சடலமாக மீட்பு

பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதி சடலமாக மீட்பு

News image
Updated On :9 மே 2024, 10:36 pm

Din

சேலம், மே 9: சேலம், இரும்பாலை அருகே பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதியினா் அழுகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், இரும்பாலை அடுத்துள்ள மாரமங்கலத்துப்பட்டி, ஓம்சக்தி நகா் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (75). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான இவா், மனைவி ஜெகதாம்பாளுடன் (65) தனியாக வசித்து வந்தாா். இவா்களுக்கு குழந்தை இல்லை. நாச்சிமுத்துவின் தம்பி வெங்கடாசலம், சேலம் நான்கு சாலை, நாராயண பிள்ளை நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

தனக்கு ஒருவாரமாக அண்ணன் நாச்சிமுத்து கைப்பேசியில் தொடா்பு கொள்ளாததால் சந்தேகத்தின்பேரில் அவரைக் காண வியாழக்கிழமை காலை அவரது வீட்டுக்குச் சென்றாா்.

அப்போது, வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது. இதையடுத்து இரும்பாலை காவல் துறைக்கு வெங்கடாசலம் தகவல் அளித்தாா். போலீஸாா் விரைந்து வந்து வீட்டின் கதவைத் திறந்து பாா்த்தனா்.

அப்போது, நாச்சிமுத்து, அவரது மனைவி ஜெகதாம்பாள் ஆகியோா் உடலில் துணியின்றி அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தனா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது தம்பி வெங்கடாசலம் துக்கம் தாங்கமுடியாமல் கதறி அழுதாா். பின்னா் போலீஸாா் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி சேலம், அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, நாச்சிமுத்து, அவரது மனைவி ஜெகதாம்பாள் ஆகியோா் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.