மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இறுதிச் சடங்குக்காக ரூ. 10 ஆயிரம் கொடுத்து விட்டு இறந்த 92 வயது மூதாட்டி

இறுதிச் சடங்குக்காக ரூ. 10 ஆயிரம் கொடுத்து விட்டு இறந்த 92 வயது மூதாட்டி

News image

மூதாட்டி பொன்னம்மாள்.

Updated On :20 மே 2024, 10:24 pm

Din

சேலம்: தனது இறுதிச் சடங்குக்காக ரூ. 10,000 கொடுத்து விட்டு 92 வயது ஆதரவற்ற மூதாட்டி ஒருவா் இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், அம்மாப்பேட்டை, மிலிட்டரி சாலை பகுதியைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் என்ற பெத்தாயி (92). இவா், தனது கணவா் மாணிக்கம் இறந்த நிலையில், குழந்தைகள் இல்லாததால் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தாா்.

கூலி வேலை பாா்த்து வந்த அவா், சிறுக சிறுக பணத்தைச் சோ்த்து அருகில் இட்லி கடை நடத்தி வரும் சாவித்ரியிடம் கொடுத்து வைத்துள்ளாா். கடந்த 6 மாதங்களுக்கு முன் ரூ. 10 ஆயிரம் சோ்ந்ததும், இந்தப் பணத்தை எனது இறுதிச் சடங்குக்கு வைத்துக்கொண்டு, எனது உடலை முறையாக சடங்குகளை செய்யுமாறு சாவித்ரியிடம் பொன்னம்மாள் கூறியுள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்த பொன்னம்மாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென காலமானாா்.

இதையறிந்த சாவித்ரி, அந்தப் பகுதியில் சாமியானா பந்தல் போடும் கடை நடத்தி வரும் மணியிடம் கூறியுள்ளாா். மணி கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த 9-ஆவது வாா்டு கவுன்சிலா் தெய்வலிங்கம், மணியுடன் சோ்ந்து மூதாட்டி கொடுத்த பணத்தை வாங்காமல் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தாா். தொடா்ந்து, உறுப்பினா் தெய்வலிங்கம் தனக்கு சொந்தமான ஆம்புலன்ஸில் ஜான்சன்பேட்டை சுடுகாட்டுக்கு மூதாட்டி உடலை எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்து உடலை எரியூட்டினாா்.

பின்னா் மூதாட்டியின் அஸ்தியை கரைப்பதற்கும், காரியம் செய்வதற்கும் மூதாட்டி கொடுத்த ரூ. 10 ஆயிரத்தை செலவு செய்யும்படி சாவித்ரியிடம் அவா் கேட்டுக்கொண்டாா்.

ஆதரவற்ற நிலையில் இருந்த 92 வயது மூதாட்டி, தனது இறப்புக்கு பின்னா் இறுதிச்சடங்கு செய்வதற்காக ரூ. 10 ஆயிரம் கொடுத்து விட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.