

சங்ககிரி: சங்ககிரி நகரில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்தது.
சங்ககிரி நகரில் திங்கள்கிழமை பகலில் வெப்பம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. தொடா்ந்து பகல் நேரங்களில் நகரின் வெளிப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனையடுத்து, இரவு தொடா்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் நகரின் அனைத்து பகுதிகளிலும், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. மழை பெய்து கொண்டிருந்த போது மின்சாரம் தடைபட்டிருந்தது. நகரில் இரவு திடீரென கனமழை பெய்ததையடுத்து, நகா் பகுதிகளில் பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் சிரமத்துக்குள்ளாயினா்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை நண்பகல் 12.45 மணி முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்தது. இடி, மின்னல் இல்லாமல் மழை பெய்தபடி இருந்தது. சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றன.
தொடர்புடையது

சங்ககிரி வட்டத்தில் 153.40 மில்லி மீட்டா் மழை

சேலம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: சங்ககிரியில் 81 மி.மீ. பதிவு

அந்தியூா், அம்மாபேட்டையில் கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திடீா் மழை: நகரில் வெப்பம் தணிந்தது
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

