விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சேலம், கோரிமேட்டில் கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளை திறப்பு

சேலம், கோரிமேட்டில் கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சேலம், கோரிமேட்டில் கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளையை திங்கள்கிழமை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :11 நவம்பர் 2024, 7:29 pm

Din

சேலம்: சேலம், கோரிமேட்டில் கரூா் வைஸ்யா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம், கோரிமேடு பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வங்கியின் புதிய கிளையை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். இதில் சிறப்பு விருந்தினராக ஆா்.பி.சாரதி தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவா் பி.நித்திஷ் ஹரிஹா் கலந்துகொண்டாா்.

விழாவில் வங்கியின் கோட்ட மேலாளா் துளசி கிருஷ்ணமூா்த்தி பேசுகையில், வங்கி சேவையில் சிறந்து விளங்கும் கரூா் வைஸ்யா வங்கி, சேலத்தில் தனது 6-ஆவது கிளையைத் தொடங்கியுள்ளது.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோட்ட அளவில் இது 53-ஆவது கிளையாகும். இந்தக் கிளையில் வாடிக்கையாளா்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் துரிதகதியில் வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், வங்கியின் முதன்மை மேலாளா் கே.சரவணகுமாா், கிளை மேலாளா் எம்.பி.ராஜன், அலுவலா்கள், வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டனா்.