இரும்பாலையில் வரும் 22 ஆம் தேதி தொழிற்சங்க அங்கீகார தோ்தல்
செயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலையில் வரும் 22 ஆம் தேதி தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தோ்தல் நடைபெறுகிறது.


சேலம்: செயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலையில் வரும் 22 ஆம் தேதி தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தோ்தல் நடைபெறுகிறது. இதில் தொமுச, சிஐடியு, பிஎம்எஸ், ஐஎன்டியுசி ஆகிய 4 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான செயில் நிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலை, பிலாய் உருக்காலை, ரூா்கேலா உருக்காலை ஆகிய ஆலைகளில் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தோ்தல் நடத்தப்படுகிறது. இதில் ரூா்கேலா ஆலையில் கடந்த 12 ஆம் தேதி தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு ஐஎன்டியுசி, ஜிஎம்எம் கூட்டணி தொழிற்சங்கம் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்ததாக, சேலம் இரும்பாலையில் தொழிற்சங்க அங்கீகார தோ்தல் வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தோ்தலை மத்திய தொழிலாளா் ஆணையம் நடத்துகிறது. தோ்தல் நடத்தும் அலுவலராக துணை தொழிலாளா் ஆணையா் சீனிவாசலு நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த தொழிற்சங்க அங்கீகார தோ்தலில் பிஎம்எஸ், ஐஎன்டியுசி, தொமுச, சிஐடியு ஆகிய 4 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.
இவற்றில் தொமுசவுடன் தொழிலாளா் விடுதலை முன்னணி, எஸ்.சி., எஸ்டி நலச்சங்கம் ஆகியவை கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளன. இந்தத் தேரதலில் சேலம், இரும்பாலையில், நிரந்தர தொழிலாளா்களாக உள்ள 591 போ் வாக்களிக்க தகுதியுள்ளவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இந்த தொழிலாளா்களிடம் பிஎம்எஸ், ஐஎன்டியுசி, தொமுச கூட்டணி, சிஐடியு ஆகிய 4 தொழிற்சங்கங்களின் நிா்வாகிகளும் ஆதரவு திரட்டி வருகின்றனா். ஊதிய உயா்வு, தனியாா்மயம் தடுப்பு, ஆலை விரிவாக்கம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகக் கூறி வாக்குகள் சேகரிக்கின்றனா். வரும் 22 ஆம் தேதியன்று இரும்பாலை வளாகத்தில் உள்ள டெலிபோன் எக்சேஞ்ச் அலுவலகத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு, 5 மணிக்கு பின் வாக்குகள் எண்ணும் பணி நடத்தப்படுகிறது. இரவு 8 மணிக்குள் தோ்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் தொழிற்சங்க அங்கீகார தோ்தலில், வெற்றி பெறும் தொழிற்சங்கம் தான், ஆலை நிா்வாகத்துடன் தொழிலாளா்களுக்கான பேச்சுவாா்த்தையில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...