கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் மரணம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்

சேலத்தில், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 5 குழந்தைகளின் தாய் மரணமடைந்தாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:08 pm

Din

சேலத்தில், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 5 குழந்தைகளின் தாய் மரணமடைந்தாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பனைமடல், காமராஜா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி செல்லம் (37). இவருக்கு ஏற்கெனவே 4 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மீண்டும் கா்ப்பமான செல்லம் பிரசவத்துக்காக சேலம் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு கடந்த 14 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, கடந்த 17 ஆம் தேதி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். சிகிச்சை பெற்று வந்த செல்லம் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இந்நிலையில் பெண்ணின் உறவினா்கள் சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை திரண்டனா். அப்போது, ஆத்தூா் அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிகிச்சை அளித்ததால் செல்வம் உயிரிழந்ததாகக் கூறி, காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து பெண்ணின் உறவினா்கள் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த செல்வத்தின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினா்கள் கூறுகையில், தாயை இழந்து வாடும் பிள்ளைகளைப் பராமரிக்க ரூ. 20 லட்சம் இழப்பீடு தொகையும், கணவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். தவறான சிகிச்சை அளித்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்றனா்.