சிறுத்தையைப் பிடிக்க முகாமிட்டுள்ள வனத்துறையினா்!
பச்சமலையில் 3 கன்றுக் குட்டிகளைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினா் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டுள்ளனா்.


பச்சமலையில் 3 கன்றுக் குட்டிகளைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினா் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அங்கேயே முகாமிட்டுள்ளனா்.
பச்சமலை ஊராட்சி, கெங்கவல்லி அருகே கீழ்பாலத்தாங்கரை மலைக்கிராமத்தில் பிச்சமுத்து என்பவரின் மூன்று கன்றுக்குட்டிகளை சிறுத்தை கடித்துக் கொன்றது. அதனையடுத்து, ஆத்தூா் கோட்ட வன அலுவலா் ஆரோக்கியராஜ் சேவியா் உத்தரவின் பேரில், கெங்கவல்லி வனச்சரகா் சிவக்குமாா் தலைமையில் வனத்துறையினா், அக்கிராமத்தில் தொடா்ந்து முகாமிட்டுள்ளனா்.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதை பதிவு செய்ய 7 அதிநவீன கேமராக்களை காட்டுப் பகுதியில் ஆங்காங்கே பொருத்தியுள்ளனா். இருப்பினும் அதில் பதிவாகவில்லை. ஆனால், அதன் நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் மூலம் தொடா்ந்து உறுதிப்படுத்தி வருகின்றனா். இதுகுறித்து வனச்சரகா் சிவக்குமாா் கூறியதாவது:
பச்சமலையில் தங்கி முகாமிட்டுள்ளோம். இதுவரை சிறுத்தை சிக்கவில்லை. இருப்பினும் சிறுத்தை செல்லும் பாதை, அவை எடுத்துக்கொள்ளும் உணவுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருகிறோம். சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்கவும் முடிவு செய்துள்ளோம். அனுமதிபெற்று சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் ஆராய்ந்து வருகிறோம். விரைவில் சிறுத்தை சிக்கிவிடும் என்றாா்.
சிறுத்தை நடமாட்டத்துக்கு பயந்து கீழ்பாலத்தாங்கரை கிராமத்தினா் வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டினுள்ளே முடங்கிக் கிடக்கின்றனா். வனத்துறை எடுத்து வரும் தீவிர முயற்சியில் சிறுத்தை பிடிபட்டு விடும் என அப்பகுதி கிராமத்தினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...