மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,226 கன அடியாக குறைந்தது.

Updated On :10 அக்டோபர் 2024, 7:32 pm

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,226 கன அடியாக குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து சரிந்து வருகிறது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 9,206 கன அடியிலிருந்து 7,226 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 91.73 அடியில் இருந்து 91.08 அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 53.89 டிஎம்சியாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...