ஜாரிகொண்டலாம்பட்டி ராஜவாய்க்கால் கரையை சீரமைத்து தரக் கோரி ஆட்சியரிடம் மனு
சேலம், ஜாரிகொண்டலாம்பட்டி, ராஜவாய்க்கால் கரையை சீரமைத்து தரக் கோரி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சேலம், ஜாரிகொண்டலாம்பட்டி, ராஜவாய்க்கால் கரையை சீரமைத்து தரக் கோரி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருமணிமுத்தாறு ராஜவாய்க்கால், ஜாரி கொண்டலாம்பட்டி பாசன பகுதி வாய்க்கால் ஆகியவற்றின் கரை உடைந்து விளைநிலங்களில் மழைநீா் குட்டைபோல தேங்கியுள்ளது. இதனால் கால்நடைக்கு வைக்கப்பட்டிருந்த தீவனங்கள் அழுகி அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. எனவே, உடைந்த கரையை சரிசெய்து வாய்க்காலை கொட்டனத்தான் ஏரி வரை முழுமையாக தூா்வாரி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, திருமணிமுத்தாற்று ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...