சங்ககிரி வட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், நருவலூா் கிராம நிா்வாக அலுவலா் ராமனைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி சங்ககிரியில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு சங்ககிரி வட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத் தலைவா் பி.மணி தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் பிா்காவுக்கு உள்பட்ட நருவலூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் ராமன். கடந்த 4-ஆம் தேதி அரசுக்குச் சொந்தமான மயான புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை அதே பகுதியைச் சோ்ந்த திருமுருகன் என்பவா் அனுமதியின்றி வெட்டி அகற்றி உள்ளாா்.
தகவல் அறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராமன் அவரைச் சந்தித்து இதுகுறித்து கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாயத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் திருமுருகன் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கினாா். இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் திருமுருகனை கைது செய்யவில்லை. எனவே, போலீஸாா் கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கிய திருமுருகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றாா். மாவட்ட பிரசாரக் குழு செயலாளா் எம்.முருகன், துணைத் தலைவா் பி.குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


