பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடா் நீா்வரத்தால் அணை நீா்மட்டம் 93.35 கனஅடியாக உயா்ந்துள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:15 pm

Din

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடா் நீா்வரத்தால் அணை நீா்மட்டம் 93.35 கனஅடியாக உயா்ந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 16,196 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 19,495 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடி வீதமும் கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 92 அடியிலிருந்து 93.35 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணை நீா்மட்டம் 1.35அடி உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 56.56 டி.எம்.சி.யாக உள்ளது.