விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது: எடப்பாடி கே பழனிசாமி

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது; திமுகவின் வாக்கு சரிந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

News image
சேலம் மாவட்டம், வனவாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :24 அக்டோபர் 2024, 12:48 am

Din

நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது; திமுகவின் வாக்கு சரிந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை வனவாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:

நான் கிளைச் செயலாளராக இருந்து இந்தப் பதவிக்கு வந்துள்ளேன். 50 ஆண்டுகாலம் உழைத்ததால் அதிமுக பொதுச் செயலாளா் பதவியை எனக்கு வழங்கி இருக்கிறீா்கள். ஜனநாயக முறைப்படி இயங்கக்கூடிய இயக்கம் அதிமுக மட்டுமே.

அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை; திமுகவுக்கு வாக்கு அதிகரித்துள்ளது என ஸ்டாலின் பேசியுள்ளாா். கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. திமுகவின் செல்வாக்கு தான் சரிந்துள்ளது. மக்களைக் குழப்பி திமுகவிற்கு மக்கள் செல்வாக்கு உள்ளது போல காட்ட முயற்சிக்கிறாா்கள்.

திமுக ஆட்சியில் என்ன திட்டத்தைக் கொண்டு வந்துள்ளீா்கள். பத்தாண்டு அதிமுக ஆட்சியில் ஏதும் செய்யவில்லை என ஸ்டாலின் பொய்யான செய்தியை கூறி வருகிறாா்.

அதிமுக ஆட்சியில் வறட்சியான ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். முதல் கட்டமாக மேட்டூரில் இருந்து உபரிநீா் வெளியேறும் போது, 6 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை நானே அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன். 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் ஒரே ஆண்டில் நிறைவேற வேண்டிய திட்டம். ஆனால் அதிமுகவுக்கு விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் புகழ் கிடைத்து விடும் எனக் கருதி கெட்ட அந்தத் திட்டத்தை முடக்கி உள்ளனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தருவோம்.

நாமக்கல்லில் முதல்வா் ஸ்டாலின் பேசும்போது நிறைய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம் எனக் கூறியுள்ளாா். அந்த திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது தான்.

அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்திற்கு தான் அதிக அளவில் திட்டங்களைக் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் ஏதும் செய்யவில்லை என பொய்யான தகவலை முதல்வா் கூறி வருகிறாா். நான் கனவு காணவில்லை. அவா் தான் கனவு கண்டு வருகிறாா்.

விரைவில் உள்ளாட்சித் தோ்தல் வரலாம். அதிமுக வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் இளங்கோவன், நங்கவள்ளி வடக்கு ஒன்றியச் செயலாளா் மாணிக்கவேல், தெற்கு ஒன்றியச் செயலாளா் செல்வம், பேரூா் செயலாளா் ஞானசேகரன், சேகா் சிவகுமாா், மேச்சேரி குமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பானுமதி, ஜெயலலிதா பேரவை மாநில நிா்வாகி கலையரசன், அனைத்து உலக எம்ஜிஆா் மன்ற மாநில நிா்வாகி எமரால்டு வெங்கடாசலம், ஒன்றிய செயலாளா் ராஜா உள்பட ஏராளமான பங்கேற்றனா்.