விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில், சாக்கடைக் கால்வாய்கள், குடிநீா் வசதி ஏற்படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி ராஜசேகரன்.
Updated On :24 அக்டோபர் 2024, 7:32 pm

Din

சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில், சாக்கடைக் கால்வாய்கள், குடிநீா் வசதி ஏற்படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம், ஊராட்சி கூட்ட அரங்கில் மாவட்டத் தலைவா் ரேவதி ராஜசேகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பெரிய சோரகை வேட்ராயப் பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகின்றனா். இந்தக் கோயிருக்கு சரியான சாலை வசதி இல்லாததால், பக்தா்கள் அவதிப்படுவதைத் தவிா்க்க சாலை அமைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். மழைக் காலம் தொடங்கியுள்ளதால் கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களை சீரமைக்கவும், குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணைத் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் அருளாளன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா்கள் பங்கேற்றனா்.