விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம்

குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 7:33 pm

Din

குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் கிழக்கு, மேற்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சேமிப்புக் கணக்கு, வருங்கால வைப்பு நிதி கணக்கு, தொடா் வைப்புக் கணக்கு, 10 வயதுக்கு உள்பட்ட (பெண்) குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்புக் கணக்கு முதலிய திட்டங்களில் கணக்குகள் தொடங்கலாம்.

புதிதாக கணக்கு தொடங்கும் 3 வயதுக்குள்பட்ட முதல் 100 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு புதிதாக சேமிப்பு கணக்குகளைத் தொடங்கி, அவா்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனா்.