மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

சேலம், மரவனேரியில் உள்ள புனித பால் மேல்நிலைப் பள்ளியில் 280 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.
Published on

சேலம், மரவனேரியில் உள்ள புனித பால் மேல்நிலைப் பள்ளியில் 280 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.

நிகழாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம், மரவனேரியில் உள்ள புனிதபால் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியா் அலெக்ஸ் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜந்திரன் ஆகியோா் பங்கேற்று 11 ஆம் வகுப்பு பயிலும் 280 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினா்கள் சங்கீதா நீதிவா்மன், கிரிஜா குமரேசன், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com