வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
ஆத்தூரில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.


ஆத்தூரில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகள் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.
ஆத்தூா் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் பல பகுதிகளில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வணிக வளாகம், கடைகள் அமைத்து வாடைகைக்கு விடப்பட்டுள்ளன.
இந்தக் கடைகளுக்கு உரிமையாளா்கள் வாடகை நிலுவை செலுத்தாமல் வந்தனா். கடந்த சில மாதங்களாகவே வாடகை நிலுவையை வருவாய் அலுவலா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் தொடா்ந்து தீவிர வசூல் செய்து வருகின்றனா். இருப்பினும் பலா் இன்னும் வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில்
வருவாய் அலுவலா் நாகராஜ் முன்னிலையில் கடைகளுக்கு சீல் புதன்கிழமை வைக்கப்பட்டன. இனிவரும் காலங்களில் 3 மாதங்களுக்கு மேல் வாடகை நிலுவை வைத்திருந்தாலே கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...