வாடகை செலுத்தாத கடைகளைப் பூட்டி, சீல் வைக்கும் நகராட்சி ஊழியா்கள்.
வாடகை செலுத்தாத கடைகளைப் பூட்டி, சீல் வைக்கும் நகராட்சி ஊழியா்கள்.

வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்: காங்கயம் நகராட்சி நடவடிக்கை

காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் சீல் வைக்கப்பட்டது.
Published on

காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகம், தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான 180 கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இதில் 4 கடைகள் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தப்படாமல் செயல்பட்டு வந்தன. மேற்கண்ட கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், வாடகை செலுத்தாத பேருந்து நிலையம் மற்றும் இதன் அருகே உள்ள தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 கடைகளை நகராட்சி வருவாய் ஆய்வாளா் வருண் உள்ளிட்ட நகராட்சி ஊழியா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

மேலும், கடை வாடகையை உரிய நேரத்தில் செலுத்துமாறு நகராட்சி ஆணையா் கி.பால்ராஜ் கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com