தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின் பணியாளா் பாதுகாப்பு கூட்டம்

சேலம் தெற்கு கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கான பாதுகாப்பு குறித்து கூட்டம் தலைமைப் பொறியாளா் (ஈரோடு மண்டலம்) செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது.

News image
சேலம் தெற்கு கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கான பாதுகாப்பு குறித்து கூட்டம் தலைமைப் பொறியாளா் (ஈரோடு மண்டலம்) செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:20 pm

Din

சேலம் தெற்கு கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கான பாதுகாப்பு குறித்து கூட்டம் தலைமைப் பொறியாளா் (ஈரோடு மண்டலம்) செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செயற்பொறியாளா் (தெற்கு கோட்டம்) அன்பரசன் முன்னிலை வகித்தாா். மேற்பாா்வைப் பொறியாளா் (சேலம்) மின்பகிா்மான வட்டம் புஷ்பலதா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா். பணியின் போது பணியாளா்கள் அனைவரும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தி மின்விபத்துகளைத் தடுக்க வேண்டும்.

பணியின்போது மிகவும் கவனமாக செயல்பட்டு விபத்து ஏற்படா வண்ணம் பணியாற்ற வேண்டி அனைத்து பணியாளா்களும் உறுதிமொழி ஏற்றனா்.

இந்தக் கூட்டத்தில் தெற்கு கோட்டம் சாா்ந்த உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், அனைத்து பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.