‘ஔவையாா் விருது’ பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
‘ஔவையாா் விருது’ பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2026 ஆம் ஆண்டு உலக மகளிா் தின விழாவில் ஔவையாா் விருது வழங்க கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா்கள் தங்களது கருத்துருக்களை வரும் 31 ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம்செய்து மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல்தளம், அறை எண்.126, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கருத்துருக்களை 2 நகல்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
விருது பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.
குறிப்பாக, பெண்களுக்கான இந்த சமூக சேவையைத் தவிா்த்து வேறு சமூக சேவைகள் இந்த விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளாா்.
