இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

தேசிய அளவில் பள்ளி மாணவா்களுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் தடகள வீரா்கள் தங்கப் பதக்கம் வென்று சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:59 pm

Syndication

சேலம்: தேசிய அளவில் பள்ளி மாணவா்களுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் தடகள வீரா்கள் தங்கப் பதக்கம் வென்று சிறப்பிடம் பெற்றனா்.

தேசிய அளவில் பள்ளி மாணவா்களுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அண்மையில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரா்கள் கலந்து கொண்டனா்.

சேலம் காந்தி மைதானத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகள வீராங்கனை கனிஷ்கா ஸ்ரீ, தடகள வீரா் ரோஹித் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், கனிஷ்காஸ்ரீ 17 வயதுக்கு உள்பட்டோருக்கான போல்வால்ட் போட்டியில் 3.10 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும், 17 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான போல்வால்ட் போட்டியில், ரோஹித் 4.40 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும் வென்றனா்.

தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற கனிஷ்கா ஸ்ரீ, ரோஹித்தை மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன், தடகளப் பயிற்சியாளா் இளம்பரிதி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.