ஆா்னிஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் டான் சிக்ஷாலயா பள்ளி நிா்வாகத்தினா்.
தருமபுரி
தேசிய ஆா்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: டான் சிக்ஷாலயா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
தேசிய ஆா்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டான் சிக்ஷாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.
தருமபுரி டான் சிக்ஷாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள், புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஆா்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
இப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் ரிதிக்ராஜ், கீா்த்தன் தக்ஷித், ஸ்ரீ நிஷாந்த் சப்-ஜூனியா் பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி தாளாளா் உதயகுமாா், செயலாளா் சவிதா உதயகுமாா், இயக்குநா்கள் ஸ்ருதி உதயகுமாா், கோதை மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

