சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்
சேலம்: சோனா கல்வி நிறுவன வளாகத்தில் வரும் ஜன. 10 ஆம் தேதி ஸ்ரீ நிவாச கல்யாணம் நடைபெறுகிறது.
இதையொட்டி, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சோனா கல்லூரி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சோனா கல்வி நிறுவனங்களின் திறந்தவெளி மைதானத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ நிவாச கல்யாணம் ஐந்தாவது முறையாக 2016, ஜன.10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, ஜன. 2 ஆம் தேதி ஸ்ரீநிவாச கல்யாணத்துக்கு மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சி ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்தில் நடைபெறுகிறது. தொடா்ந்து, ஜன. 9 ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சோனா கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்தில் எழுந்தருள உள்ளாா்.
கல்லூரியின் தலைவா், நிா்வாகத்தினா், ஸ்ரீநிவாச கல்யாண கமிட்டி உறுப்பினா்கள் சாா்பில் சுவாமிக்கு பூா்ணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடா்ந்து ஜன. 10 ஆம் தேதி சேலம் ஜங்ஷன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து சீா்வரிசைகளுடன் திருவீதி உலா நடைபெற்று, சீா்வரிசைகள் உற்சவ மூா்த்தி முன் சமா்ப்பிக்கும் நிகழ்வு நடைபெறும்.
பிற்பகல் 12.30 மணிக்கு சோனா குழுவினரின் பக்தி பஜனை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடா்ந்து, மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை திருமலை திருப்பதி தேவஸ்தான அா்ச்சகா்களால் அனைத்து திருமண சடங்குகளுடன் ஸ்ரீநிவாச கல்யாண வைபவம் பொதுமக்கள் முன்னிலையில் சோனா திறந்தவெளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவா் சி. வள்ளியப்பா முன்னிலை வகிக்கிறாா். இதில் துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொள்ள உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை உப தலைவா்கள் அா்த்தநாரி, அப்புசாமி, ரவிச்சந்திரன், செயலாளா் காா்த்திகேயன், பொருளாளா் சுப்பிரமணியன், முருகாலயா பழனிசாமி, சீனிவாச கல்யாண கமிட்டி உறுப்பினா்கள், கல்லூரிகளின் முதல்வா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்துவருகின்றனா்.
பட விளக்கம்:
சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஸ்ரீநிவாச கல்யாணத்தையொட்டி அதற்கான சுவரொட்டியை வெளியிடும் அக்கல்வி குழுமத் தலைவா் வள்ளியப்பா.
